search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான மாடுகளை படத்தில் காணலாம்.
    X
    பலியான மாடுகளை படத்தில் காணலாம்.

    செங்கத்தில் கனமழை செய்யாற்று வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட 7 மாடு பலி

    செங்கம் பகுதியில் பெய்த கன மழையால் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 7 மாடுகள் இறந்தன. வாழைகள் சேதமடைந்தன.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்தது. இதனால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செங்கம் அடுத்துள்ள ஊர் கவுண்டனூர், பரமனந்தல், குப்பநத்தம், கல்லாத்தூர், உள்ளிட்ட கிராமங்கள் பண்ரேவ் மலையை ஒட்டி உள்ள கிராமபகுதிகள். இப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் உள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. 

    இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் அடித்து செல்லப்பட்டது. ஊர்கவுண்டனூரில் விளைநிலங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 மாடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியானது. இறந்த மாடுகள் உடல்கள் கரை ஒதுங்கின. மேலும் இந்த கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

    மேலும் மழை மற்றும் வெள்ளத்தினால் விவசாயிகள் மற்றும் கால்நடைகளை வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய தமிழக அரசு தக்க நிவாரண உதவி தர வேண்டும் எனவும், மேலும் உடனடியாக சாய்ந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்து மின்சார வசதி செய்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×