search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிராட்வே பஸ் நிலையம் (கோப்புப்படம்)
    X
    பிராட்வே பஸ் நிலையம் (கோப்புப்படம்)

    பிராட்வே பஸ் நிலையத்தில் 21 மாடி பிரமாண்ட நவீன வணிக வளாகம்

    பிராட்வே பஸ் நிலையத்தில் 21 மாடி கொண்ட பிரமாண்ட நவீன வணிக வளாகம் புதிதாக கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 97 பஸ்கள் நிறுத்தும் வசதியும் உருவாக்கப்படுகிறது.
    சென்னை:

    பிராட்வே பஸ் நிலையம் சென்னை மாநகரின் மிகப்பெரிய பஸ் நிலையங்களில் ஒன்று ஆகும். இங்கு இருந்து ஆயிரக்கணக்கான பஸ்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பிராட்வே பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பிராட்வே பஸ் நிலையத்தில் 21 மாடிகளுடன் பிரமாண்ட நவீன வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பொது மக்கள், தனியார் பங்களிப்புடன் சென்னை மெட்ரோ இணைந்து இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

    10 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்ட 21 மாடிகளுடன் நவீன வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த திட்டத்துக்கான இறுதி மாதிரி வடிவம் மாநாராட்சி ரிப்பன் மாளிகையில் வழங்கப்பட்டுள்ளது.

    5.3 லட்சம் சதுர அடியில் வாகனம் நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1,904 கார்கள், 1,820 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தலாம். ஒரே நேரத்தில் 97 பஸ்கள் நிறுத்தும் வசதியுடன் 2 அடுக்கு பஸ் நிறுத்தம் உருவாக்கப்படுகிறது. தரை தளத்தில் மட்டும் 53 பஸ்கள் நிறுத்தலாம். மேல் தளத்தில் 44 பஸ்களை நிறுத்தலாம்.

    92,800 சதுர அடியில் பல அடுக்கு வணிக வளாகம் 21 மாடியில் கட்டப்பட உள்ளது.

    இங்கு இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும், பறக்கும் ரெயில் நிலையத்துக்கும் பயணிகள் எளிதில் செல்ல சிறப்பு வசதிகள் உருவாக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு ரூ.20 கட்டணமும், கார்கள் நிறுத்த ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்படும்.
    Next Story
    ×