search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மாலை அணிவித்தபோது எடுத்த படம்
    X
    பெரியார் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மாலை அணிவித்தபோது எடுத்த படம்

    அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைப்பா? - டி.டி.வி.தினகரன் விளக்கம்

    சசிகலா வந்தவுடன் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க இணைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
    கும்பகோணம்:

    தந்தை பெரியாரின் 141-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இந்தி திணிப்பதை தடுக்க வேண்டும். மத்திய அரசு இந்தியை தமிழ்நாட்டில் திணிக்காது என்று நம்பிக்கை உள்ளது.

    அ.ம.மு.க.வின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. வருங்காலத்தில் அ.ம.மு.க தான் தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக, கட்சியாக விளங்கும்.

    சசிகலாவை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி செய்து வருகிறோம். சசிகலா வந்தவுடன் அதி.மு.க.வுடன் அ.ம.மு.க இணைக்கப்படுமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். வதந்திகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது.

    புகழேந்தி

    கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி அ.ம.மு.க கட்சி தனக்கு தான் சொந்தம் என்று கூறி வருகிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. அதற்கு தேவையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×