search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் விரட்டியடிப்பு (கோப்புப்படம்)
    X
    மீனவர்கள் விரட்டியடிப்பு (கோப்புப்படம்)

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு

    எல்லை தாண்டியதாக கூறி ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர். மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
    ராமேசுவரம்:

    ராமேசுரவம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே இந்திய எல்லையையொட்டி உள்ள கடல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், ‘இது சர்வதேச கடல் எல்லை, எனவே மீன்பிடிக்க அனுமதி இல்லை, உடனே இங்கிருந்து செல்லுங்கள்’ என மிரட்டும் தொணியில் மீனவர்களை எச்சரித்தனர். மேலும் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

    தொடர்ந்து இந்தப் பகுதியில் மீன்பிடித்தால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என எச்சரித்த கடற்படையினர், மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    கடந்த 2 வாரத்தில் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் 2-வது முறையாக தாக்கி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×