search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவாஹிருல்லா
    X
    ஜவாஹிருல்லா

    இந்தி மொழியை திணித்தால் போராட்டம் நடத்துவோம்- ஜவாஹிருல்லா பேட்டி

    இந்தி திணிப்பை கட்டாயப்படுத்தினால் அதனை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த தத்துவாஞ்சேரியில் மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்திலுள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுதேர்வு நடைபெறும் என தமிழக அரசாணை மூலமாக தெரிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால், இடை நிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு அரசு பொது தேர்வு அறிவித்துள்ளதை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

    இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவோம். அதனை கற்றால் நாடு வளர்ச்சி பெறும் என்ற அமித்ஷா கருத்து கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே மொழி என்பது ஆர்எஸ்எஸ் திட்டம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாச்சாரம் சிதையும். இந்தி மொழியை, இந்தி திணிப்பை கட்டாயப்படுத்தினால், அதனை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து மனித நேய மக்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபடும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×