search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்ஜூன் சம்பத்
    X
    அர்ஜூன் சம்பத்

    2021 சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்துவார்- அர்ஜூன் சம்பத்

    தமிழகத்தில் நடைபெற உள்ள 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ரஜினிகாந்த் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
    கன்னியாகுமரி:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் தமிழக பாரதிய ஜனதா தலைவராக அறிவிக்கப்படுவார் என்ற தகவல் தவறானது. அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார். நடைபெற உள்ள 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவார்.

    தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளை மீட்கும் முயற்சியில் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிலைகளை மீட்கும் இக்குழுவுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பாரம்பரிய சிலைகளை மீட்கும் முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    அய்யா வைகுண்டர் அனைவருக்கும் பொதுவானவர். இந்து மதத்தின் ஒரு அங்கமான அய்யா வழியை சிலர் தனி சமயமாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். இது தவறான அணுகுமுறை. சபரிமலையின் புனிதம் காக்க இந்து மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்.

    ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இவற்றை தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்குகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அர்ஜூன் சம்பத் கன்னியாகுமரி விவேகானந்திர வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலை மற்றும் ஏக்நாத் ரானடேயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
    Next Story
    ×