search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் தனியார் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார கொடி பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
    X
    திருப்பூரில் தனியார் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார கொடி பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 4 ஆயிரம் பேனர்கள் அகற்றம்

    கோவை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பேனர், அனுமதி காலம் முடிந்த பின்னர் இருந்த பேனர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டன.
    திருப்பூர்:

    சென்னையில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பேனர் சரிந்ததில் நிலைதடுமாறி லாரியில் சிக்கி பலியானார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சென்னை ஐகோர்ட் கடும் கண்டம் தெரிவித்தது. இதனையடுத்து பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பேனர்களை அகற்ற மாநகராட்சி கமி‌ஷனர் சிவக்குமர் உத்தரவிட்டார். இதனையடுத்து திருப்பூரில் பல பகுதிகளில் அனுமதியின்றி ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    இதேபோன்று கோவையிலும் பேனர் அகற்றும் பணி நடைபெற்றது. கோவை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பேனர், அனுமதி காலம் முடிந்த பின்னர் இருந்த பேனர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டன.

    விதிமுறை மீறி பேனர் வைத்த 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநராட்கி கமி‌ஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×