search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைந்ததால்மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது.

    மேட்டூர், செப். 14-

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பெய்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    மேட்டூர் அணை நிரம்பியது

    இந்த தண்ணீர் நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. பாது காப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப் பட்டது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படிப்பாக குறைந்தது.

    நேற்று 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட உபரி நீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. ஆனால் நீர் மின் நிலையங்கள் வழியாக டெல்டா பாசனத்திற்காக தற்போது 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத் திற்காக 900 கன அடி தண்ணீ ரும் திறந்துவிடப்படுகிறது.

    நீர்வரத்து சரிந்து வருவ தால் அணையின் நீர்மட்டமும் நேற்று முன்தினம் முதல் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் 120.63 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 120.26 அடியாகவும், இன்று காலை 120 அடியாகவும் குறைந்தது.

    நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    Next Story
    ×