search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாந்தி - பாண்டி செல்வி
    X
    சாந்தி - பாண்டி செல்வி

    மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பக்தர்கள் மகிழ்ச்சி

    மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் அனைவருக்கும் வருகிற தீபாவளி முதல் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    இது குறித்து இன்று கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    திருப்பதி போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் திருப்பதிக்கு இணையான புகழ் மதுரைக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் ஒருவர் விடுபடாமல் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் லட்டு வழங்க வேண்டும். அதற்குரிய வசதிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

    அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது பாராட்டுக்குரியது.

    திருப்பதி லட்டு என்பது பாரம்பரிய சுவை உடையது. இதற்கு இணையாக மதுரையின் லட்டு பிரசாதமும் அமைய வேண்டும்.

    எனவே கோவில் நிர்வாகம் பிரசித்தி பெற்ற சமையல்காரர்களின் பங்களிப்புடன் சிறந்த சுவை அம்சங்களுடன் கூடிய லட்டுகளை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாத ஸ்டால்களில் வழங்கப்பட்டன. பணம் செலுத்தி அதனை பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.

    தற்போது இங்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. திருப்பதி என்றாலே லட்டு தான். தற்போது இந்த வரிசையில் மதுரையும் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

    Next Story
    ×