என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு
Byமாலை மலர்12 Sep 2019 12:54 PM GMT (Updated: 12 Sep 2019 12:54 PM GMT)
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும் என கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை:
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது போன்றே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு இலவசமாக வழங்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில், கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு ஒன்றை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். லட்டுகள் அனைத்தும் மனிதர்கள் கைபடாமல் முழுக்க முழுக்க இயந்திரத்தால் தயாரிக்கப்பட உள்ளது.
மேலும், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கும் புதிய திட்டம் தீபாவளி நாளான அக்டோபர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார்.
Next Story
×