search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    செல்பி எடுத்தபோது அடவிநயினார் அணையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மரணம்

    செல்பி எடுத்தபோது அடவிநயினார் அணையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் குண்டாறு, கொடுமுடியாறு, கருப்பாநதி, ராமநதி, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பின. 132 அடி உயரமுள்ள அடவிநயினார் அணை முழுவதுமாக நிரம்பி வழிந்தது.

    அணை நிரம்பி தண்ணீர் வழிந்து செல்வதை பார்க்க அணைப்பகுதிக்கு ஏராளமானோர் சென்று வந்த வண்ணம் இருந்தனர். செங்கோட்டை அருகே உள்ள வடகரை மதரஸா தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது மகன் ஜாகீர் உசேன்(வயது 18) என்பவர் கடந்த மாதம் 30-ந்தேதி அடவிநயினார் அணைக்கு சென்றார்.

    அப்போது அவர் அணையின் மேல் பகுதிக்கு சென்று, தண்ணீர் நிரம்பி வடியும் பகுதி அருகே தடுப்பு கம்பியின் மீது ஏறி நின்று தனது செல்போனில் ‘செல்பி’ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணையின் மேலே இருந்து தண்ணீர் வழிந்துவிழும் பகுதியில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஜாகீர் உசேனை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜாகீர் உசேன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×