search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து, ஒரு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக உயர்ந்தது.

    2 வார இடைவெளியில் மட்டும் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது. அதன்பிறகும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை கடந்த 4-ந்தேதி வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது.

    அன்று காலை பவுன் ரூ.30,120-க்கு விற்பனையான நிலையில் மாலையில் சற்று குறைந்தது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களிலும் விலை சீராக குறைந்து வருகிறது.

    கடந்த 5-ந்தேதி கிராம் ரூ.3,741-க்கு விற்பனையான தங்கம் 6-ந்தேதி ரூ.3,658, 7-ந்தேதி ரூ.3,671, 8-ந்தேதி ரூ.3,671, 9-ந்தேதி ரூ.3,659, 10-ந்தேதி ரூ.3,649க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிராம் ரூ.3,634 ஆக குறைந்த நிலையில் இன்று கிராமுக்கு மேலும் ரூ.16 குறைந்தது.

    இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.3,618 க்கும், ஒரு பவுன் ரூ.28,944-க்கும் விற்பனையானது. இன்று பவுனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. கடந்த 4-ந்தேதி பவுன் ரூ.30,120-க்கு விற்பனையானது. கடந்த 8 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,176 குறைந்துள்ளது.

    இதேபோல வெள்ளி விலை இன்று 40 காசுகள் குறைந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.51.20-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.50.80 காசுகளாகவும், ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்து 800 ஆகவும் விற்பனையானது.
    Next Story
    ×