search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஆதீனம்
    X
    மதுரை ஆதீனம்

    உலக தலைவர்களுக்கு ரோல் மாடல் மோடி தான்- மதுரை ஆதீனம் பேட்டி

    உலக நாடுகளின் தலைவர்களுக்கு ‘ரோல் மாடல்’ ஆக மோடி இருக்கிறார் என்று ஆடுதுறையில் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே ஆடுதுறையில் மதுரை ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சந்திரயான் -2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது சிறிய கோளாறு ஏற்பட்டது. இதனால் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த சிக்கலுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் நிச்சயமாக அதில் வெற்றி காண்பார்கள்.

    சந்திரயான்-2 திட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி மிக்க உறுதுணையாக இருந்தது பாராட்டுக்குரியது. இக்கட்டான சூழ்நிலையில் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்திய விதம் அனைவரின் கண்களிலும் நிலைபெற்று விட்டது.

    நாட்டின் மீதான அந்நிய நாட்டின் அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இரவு- பகலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

    பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற 100 நாளில் முத்தலாக் தடை சட்டம், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்றவை எந்த தலைவரும் துணிந்து செயல்படுத்த முடியாத அதிரடி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    பிரதமர் மோடியின் அனுபவமும், பொறுமையும் தான் அவரை தெளிவுடனும், சிறப்புடனும் செயல்பட வைக்கின்றன.

    உலக நாடுகளின் தலைவர்களுக்கு ‘ரோல் மாடல்’ ஆக மோடி இருக்கிறார். நல்ல தலைவர்களை பாராட்ட வேண்டும். அப்போது வருங்காலத்தில் நல்லவர்கள், நாட்டின் தலைவர்களாக வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×