search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் விரட்டியடிப்பு (கோப்புப்படம்)
    X
    மீனவர்கள் விரட்டியடிப்பு (கோப்புப்படம்)

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை

    ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் நேற்று இரவு கடலுக்கு புறப்பட்டனர்.

    இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டியுள்ள கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் நீங்கள் எல்லை தாண்டி வந்திருக்கிறீர்கள். இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. உடனே திரும்பி செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    இதையடுத்து மீனவர்கள் அவசரஅவசரமாக வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது இலங்கை கடற்படை வீரர்கள், ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தினர்.

    அதோடு மீனவர்கள் பிடித்துவைத்திருந்த டன் கணக்கிலான மீன்களையும் பறிமுதல் செய்ததோடு அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையையொட்டி மீன்பிடிக்கச் சென்ற தகவல் இந்திய கடற்படைக்கு தெரியவந்தது. இதையடுத்து கடற்படை அதிகாரிகள் ராமேசுவரம் மீனவர்களை சர்வதேச கடல்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்க செல்ல கூடாது என எச்சரித்தனர்.
    Next Story
    ×