என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜவளகிரி வனப்பகுதியில் சுற்றித்திரியும் 60 காட்டு யானைகள் - விவசாயிகள், பொதுமக்கள் பீதி
Byமாலை மலர்12 Sep 2019 4:30 AM GMT (Updated: 12 Sep 2019 4:30 AM GMT)
தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் சுற்றித்திரியும் 60 காட்டு யானைகளால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக் கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டு யானைகள் வந்துள்ளன. அந்த யானைகள் வேறு பகுதிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானைகள் இரவு நேரங்களில் தேன்கனிக் கோட்டை, ஊடேத்துர்க்கம் வழியாக சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளன. இதனால் சானமாவு வனப்பகுதியை சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று நீரை கொண்டு நடவு செய்துள்ள நெற்பயிர்கள் நாசமடைந்துவிடும் என்பதற்காக 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஜவளகிரி வனப்பகுதியில் 60 காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து திசை திருப்பி வருகின்றனர்.
யானைகள் வருகையால் அந்த பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பீதியடைந்து உள்ளனர். ஏற்கனவே யானைகள் தாக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். பயிர்களையும் இந்த யானைகள் சேதப்படுத்தி உள்ளன.
கர்நாடக வனத்துறையினர் தங்களது வனப்பகுதியில் யானைகள் வராமல் இருக்க தேனீக்கள் வளர்ப்பை கையாண்டு வருகின்றனர். மேலும் அகழிகளையும் வெட்டி உள்ளனர். இதனால் அந்த யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு செல்லாமல் இங்கேயே சுற்றித்திரிகின்றன.

Next Story
×