search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்ட துர்க்கை அம்மன் கோவில்.
    X
    ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்ட துர்க்கை அம்மன் கோவில்.

    மயிலாப்பூர் துர்க்கை அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை கொள்ளை

    சென்னை மயிலாப்பூரில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் அப்பர்சாமி கோவில் தெருவில் பழமையான துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது.

    இந்த கோவிலில் பல்வேறு சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலை ஒன்றும் கோவிலில் உள்ளது.

    சுமார் ஒருஅடி உயரமும், 15 கிலோ எடையும் கொண்ட இந்த சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலையை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுபற்றி மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சிலையை 5 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர் ஒருவர் கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார். இது ஐம்பொன் சிலை என்று தகவல் பரவியது. போலீசார் இதனை மறுத்தனர். காணாமல் போன சிலை பித்தளை சிலை என்றும், அவர்கள் தெரிவித்தனர்.

    கோவில் சிலையை திருடியது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×