search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மீனாட்சியம்மன் கோவில்
    X
    மதுரை மீனாட்சியம்மன் கோவில்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய அரசு பரிசு

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் இந்தியாவிலேயே தூய்மையான சிறந்த புனித தலமாக தேர்வு செய்யப்பட்டு 2-ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 10 புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு மதுரை மாநகராட்சியுடன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தூய்மை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்தியாவிலேயே தூய்மையான புனித தலத்தை தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதன்படி மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி தூய்மை மேம்பாட்டு பணிகளான 25 நவீன மின்னணு கழிப்பறை அமைத்தல், குப்பைகளை தரம் பிரித்து வழக்குவதற்காக வைக்கப்பட்டுள்ள இரட்டை குப்பை தொட்டிகள், மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி பிளாஸ்டிக் பைகளை தடை செய்தல், 24 மணி நேர துப்புரவு பணிக்கு துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்தல், நவீன மண்கூட்டும் எந்திரம், 63 காம்பேக்டர் பின்கள், 4 மினி காம்பேக்டர் லாரிகள், 15 சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் எந்திரம் அமைத்தல், பக்தர்களை அழைத்து செல்வதற்கு வசதியாக 5 நவீன பேட்டரி வாகனங்கள் இயக்குதல், மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் புராதன சின்னங்கள் அமைத்து மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மதுரை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டதால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் இந்தியாவிலேயே சிறந்த புனித தலமாக தேர்வு செய்யப்பட்டு 2-ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு விருது மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை ஜல் சக்தி அமைச்சகத்தால் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஸ்ரீ கஜேந்திரசிங் ஷெகாவத், ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா ஆகியோரிடம் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் சிறப்பு விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

    Next Story
    ×