search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    விண்ணை முட்டும் தங்கம் விலை - வேலையிழக்கும் பொற்கொல்லர்கள் போராட்டம் நடத்த முடிவு

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வேலை இழந்து வரும் பொற்கொல்லர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    திண்டுக்கல்:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை தொழில் செய்யும் பொற்கொல்லர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விஸ்வகர்ம ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில், இதே நிலை தொடர்ந்தால் பொற்கொல்லர் குலத்தொழில் அழிந்து விடும். இதற்காக எந்த ஒரு அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் தேர்தலில் அவர்களிடம் வாக்களிக்க அமைப்புகள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு நமக்கு நாமே பட்டை நாமத்தை போட்டுக் கொள்கிறோம்.

    இதனால் பொற்கொல்லர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஓட்டல், பழ வியாபாரம் செய்யும் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடத்த வேண்டும். மத்திய அரசின் வருமான வரி அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், ரெயில் நிலையம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

    கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் தங்க நகை செய்யும் ஆசாரியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து பேசிய நடிகையை கண்டித்தும் அந்த தொடரை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×