search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    கவர்னராக நியமனம்: டாக்டர் தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து

    தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    டாக்டர் தமிழிசைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் வாழ்த்து தெரிவித்தார்.

    இதேபோல் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசையை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி.யும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தெலுங்கானா மாநில மக்களுக்கு டாக்டர் தமிழிசை நல்லது செய்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

    தமிழக பாட நூல் கழக தலைவர் பா.வளர்மதி:-

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். அவர் அண்டை மாநிலத்து கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தமிழகத்தை சேர்ந்த பெண்மணி மதிப்புமிக்க கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பது தமிழக பெண்களுக்கு கிடைத்த பெருமை. அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    தி.க. தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தி.க. தலைவர் வீரமணி

    ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் என்று எப்பொழுதும் என்னால் அழைக்கப்படும் (குமரி அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழக எனது சக மாணவத் தோழரின் மகள்) டாக்டர் தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.

    பாரிவேந்தர் எம்.பி.யும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×