search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சோழவந்தான் அருகே ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை- மர்ம கும்பல் ஆத்திரம்

    சோழவந்தான் அருகே வேலைக்குச் சென்ற தொழிலாளி ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகேயுள்ள ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் பாபு (வயது 39), கூலித்தொழிலாளி.

    இவர் இன்று காலை வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டார். ஊத்துக்குளி-பள்ளப்பட்டி சாலையில் நொச்சிகுளம் அருகே மர்ம கும்பல் எதிரே வந்தது.

    அந்த கும்பல் பாபுவை வழிமறித்தது. அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்ததும், விபரீதத்தை உணர்ந்து பாபு அங்கிருந்து தப்ப முயன்றார்.

    இரு சக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு வயல் வெளியில் ஓடினார். ஆனால் மர்ம கும்பல் பாபுவை விடாமல் விரட்டிச் சென்றது.

    ஒரு கட்டத்தில் அவரை சுற்றி வளைத்த கும்பல், அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியது.

    இதில் பலத்த காயம அடைந்த பாபு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவர் இறந்து விட்டதை உறுதி செய்த கும்பல், அதன் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றது.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சோழவந்தானில் பதற்றத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக் டர் பாலாஜி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் பாபு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட பாபு உடலில், 11 இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. எனவே மர்ம கும்பல் வெறியுடன் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    பாபுவின் வாகனம் சாலையில் கிடக்கிறது. ஆனால் அவர் வயல் வெளியில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். எனவே அவர் உயிர் பிழைக்க ஓடியிருப்பதும், மர்ம கும்பல் விரட்டி, விரட்டி கொலை செயலை அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.

    சம்பவ இடத்தில் இருந்து ஒரு செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அது கொலையாளிகள் தப்பி ஓடும் போது தவறி விழுந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.

    பழிக்கு பழி சம்பவத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×