search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னூரில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டிறைச்சியை நகராட்சி ஊழியர்கள் குப்பை லாரியில் கொண்டு சென்றனர்.
    X
    குன்னூரில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டிறைச்சியை நகராட்சி ஊழியர்கள் குப்பை லாரியில் கொண்டு சென்றனர்.

    குன்னூரில் எலி கடித்த மாட்டிறைச்சிகள் பறிமுதல்

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் எலி கடித்தல் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 700 கிலோ மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் இங்குள்ள சில கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சிகளை எலிகள் கடித்து தின்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த கடைகளில் சுகாதாரமற்ற முறைகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாகவும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவிக்னேஷ், குன்னூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுநந்தன் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நகராட்சி குழுவினர் நகராட்சி மார்க்கெட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள சில கடைகளில் எலிகள் இறைச்சிகளை கடித்து தின்று கொண்டிருந்தன. மேலும் நாய்களும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைகளில் சுகாதரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 700 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த இறைச்சிகளை லாரியில் ஏற்றி சென்று குன்னூர் ஓட்டுப்பட்டறையில் குப்பை கிடங்கு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

    மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்றவர்களிடம் இனி இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் இறைச்சி விற்பனை நடைபெறுவது தெரியவந்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×