search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    X
    ராஜன் செல்லப்பா எம்எல்ஏ பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அ.தி.மு.க. அரசை மு.க.ஸ்டாலின் குறை கூறுவதா?- ராஜன்செல்லப்பா எம்எல்ஏ கேள்வி

    தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தங்கள் குடும்ப நலனை பற்றித்தான் சிந்திப்பார்கள். ஆட்சியில் இல்லாதபோது மக்கள் நலனைப்பற்றி சிந்திப்பது போல் நாடகமாடுவார்கள் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேசியுள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. மதுரை வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களிடத்தில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் செல்வராஜ், விஜயலட்சுமி, சுரேஷ், வருவாய் ஆய்வாளர் வடிவேல், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார். நிர்வாகிகள் ஜெயவேல், தக்கார் பாண்டி, புதூர் கண்ணன், அபுதாகீர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் இத் திட்ட பணியை தொடங்கி வைத்து 2 நாட்களில் ஏறத்தாழ 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

    மதுரை வடக்கு தொகுதியில் ஏற்கனவே 6500 நபர் களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்த்து தகுதி உள்ள வர்களுக்கு ஒரே மாதத்தில் வழங்கப்படும் .

    மு.க.ஸ்டாலின் இந்த அரசை பற்றி குறை கூறி வருகிறார். 5 முறை தி.மு.க. ஆட்சி காலத்தில் இதுபோன்று மக்கள் நலத்திட்டங்களை செய்தது உண்டா?, தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தங்கள் குடும்ப நலனை பற்றித்தான் சிந்திப்பார்கள். ஆட்சியில் இல்லாதபோது மக்கள் நலனைப்பற்றி சிந்திப்பது போல் நாடகமாடுவார்கள். ஆகவே கடந்த காலங்களில் அரசை நாடி மக்கள் செல்லும் சூழ்நிலை இருந்தது. தற்போது மக்களை நாடி அரசு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×