search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.எம்.பி.டி. மெட்ரோ நிலையம்
    X
    சி.எம்.பி.டி. மெட்ரோ நிலையம்

    மெட்ரோ ரெயில் நிலையத்தில் 100 கிலோ வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சி.எம்.பி.டி. மெட்ரோ நிலையத்தின் கூரை மேல் 100 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தது.
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பணிமனையில் சூரிய சக்தியை பயன்படுத்தி 5.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 4.7.2019 அன்று 1.2 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இத்துடன் சேர்ந்து மொத்த உற்பத்தி திறன் 5.3 மெகாவாட் ஆக உயர்ந்தது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சி.எம்.பி.டி. மெட்ரோ நிலையத்தின் கூரை மேல் 100 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தது. மேலும் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் 8 மெகா வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஆண்டு தோறும் 116.80 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.

    இதனால் ஆண்டிற்கு ரூ.2.54 கோடி சேமிப்பு ஏற்படும். மேலும் இதனால் வெளிவரும் கரியமில வாயு வெளியிடும் அளவு ஆண்டிற்கு 11.587 டன் குறையும்.
    Next Story
    ×