search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்திய போலீசார்.
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்திய போலீசார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலியாக சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    கன்னியாகுமரி:

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை எதிரொலியாக சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    அங்குள்ள லாட்ஜ், ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள். சந்தேக நபர்கள் யாரும் தங்கியிருக்கிறார்களா? என இந்த சோதனை நடந்தது. பின்னர் யாராவது சந்தேக நபர்கள் வந்தால் தங்களுக்கு தெரிவிக்கும்படி லாட்ஜ் ஊழியர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி சென்றனர்.

    இதேபோல கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் பகுதியில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து ரோந்து சுற்றி வந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தப்பட்டனர். அவர்களின் உடைமைகள் அனைத்தும் சோதனை நடத்தப்பட்டபிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதி நவீன ரோந்து படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×