search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றால அருவி
    X
    குற்றால அருவி

    மலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

    குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு குவிய தொடங்கியுள்ளனர்.
    தென்காசி:

    நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் நீடித்திருக்கும். இந்தாண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் சீசன் தொடங்கியது. ஆனால் சில நாட்களிலேயே மழை பொய்த்ததால் சீசன் களை இழந்தது. தொடர்ந்து ஜூலை மாதமும் சீசன் கண்ணாமூச்சு காட்டியது.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து நன்றாக உள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர்.

    10 நாட்களாக ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர் கடந்த 2 நாட்களாக வெயில் காரணமாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் மீண்டும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஐந்தருவியில் நேற்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5 கிளைகளிலும் அதிகமான தண்ணீர் கொட்டியது. இதனால் அங்கு குளிப்பது ஆபத்து என்பதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர்.

    இன்று காலை குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு குவிய தொடங்கியுள்ளனர். ஐந்தருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    Next Story
    ×