search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணுமின் நிலையம்
    X
    கூடங்குளம் அணுமின் நிலையம்

    கூடங்குளம் அணு உலைகள் அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்டது - இந்திய அணுமின் கழக இயக்குனர்

    கூடங்குளம் அணு உலைகள் அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்டது என்று இந்திய அணுமின் கழக இயக்குனர் சின்ஹா ராய் கூறினார்.
    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்திய அணுமின் கழக இயக்குனர் (தொழில்நுட்பம்) சின்ஹா ராய் கலந்துகொண்டு பேசியதாவது:-

    இந்தியாவிலேயே அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடியது கூடங்குளம் அணு உலையாகும். தற்போது இந்தியாவில் குஜராத் மாநிலம் காக்ரபாரில் 2 அணு உலைகளும், ராஜஸ்தான் மாநிலம் ராவத் பாட்டாவில் 2 அணு உலைகளும், அரியானா மாநிலம் கோரக்பூரில் 2 அணுஉலைகளும் ஆக மொத்தம் 6 புதிய அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதில் 2 அணு உலைகளின் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்த அணு உலைகள் தலா 700 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்டவை ஆகும். இந்த அணு உலைகள் முழுக்க, முழுக்க இந்திய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் மேலும் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 புதிய அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது நாட்டில் அணு உலைகள் மூலம் 6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வருகிற 2026-27-ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 9,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது அணு உலையில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரமும், 2-வது அணு உலையில் இருந்து 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது அணு உலையில் இருந்து 3501 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×