search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    13 நாளில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை -சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது

    தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.28,896 என புதிய உச்சத்தில் விற்பனை ஆகிறது.
    சென்னை :

    தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உச்சத்தில் காணப்படுகிறது. இடைவெளி எதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.

    கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன்பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்ததால், கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. இந்தநிலையில் நேற்றும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 582-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 656-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21-ம் பவுனுக்கு ரூ.168-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 603-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது.

    நேற்று மாலையில் வெள்ளி கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 47 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3,612க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.28,896 க்கு விற்கப்படுகிறது. 13 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,416 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    இதேபோல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.48.50 க்கு விற்கப்படுகிறது.

    Next Story
    ×