search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதகு பணியை பிஆர் பாண்டியன் பார்வையிட்டபோது எடுத்த படம்
    X
    மதகு பணியை பிஆர் பாண்டியன் பார்வையிட்டபோது எடுத்த படம்

    6 ஆண்டுகளாக தூர்வாரும் பணியில் 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை - பி.ஆர்.பாண்டியன்

    டெல்டா மாவட்டங்களில் 6 ஆண்டுகளாக தூர்வாரும் பணியில் 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை என்று பி.ஆர்.பாண்டியன் கூறி உள்ளார்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா, அடப்பாறு, வெள்ளை ஆறுகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புகளை பார்வையிட தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டில் காவிரி டெல்டாவில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1562 கோடி மதிப்பில் பாசன ஆறுகள், வடிகால் ஆறுகளை சீரமைத்து தூர்வாரப்படும் என்று அறிவித்தார்.

    முதல்கட்டமாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் ரூ.962 கோடி மதிப்பில் வளவனாறு, பாண்டையாறு, அரிச்சந்திரா ஆறு, வெள்ளையாறு, அடப்பாறு உள்ளிட்ட ஆறுகளில் கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 30 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை.

    மேட்டூர் அணையில் இருந்து இன்று திறந்து விடப்படும் தண்ணீரை ஒருபோக சம்பாசாகுபடிக்கு கொண்டு செல்லும் ஆறுகள் நிலைகுலைந்து கிடக்கிறது. இதனால் இந்த ஆண்டும் சம்பா சாகுபடி பணியை தொடங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி

    எனவே தமிழக முதல்-அமைச்சர் விரைந்து அவருடைய நேரடி பார்வையில் அரசுத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ரூ.600 கோடி நிதியில் கோரையாறு, பாமணி ஆறுகள் சீரமைக்கும் பணியை டெண்டர் விடுவதற்கான பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×