என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருப்பதியில் பக்தர்களிடம் நகை திருடியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதியில் பக்தர்களிடம் நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் குருகுல புல்லையா (60). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய மனைவி, மகள், மருமகள் உள்ளிட்ட 6 பேருடன் வந்துள்ளார்.

  திருப்பதி தேவஸ்தான யாத்ரா சதனில் அறை எடுத்து தங்கினார். பின்னர் இரவு 9 மணியளவில் அறையை பூட்டிவிட்டு ஓட்டலில் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சூட்கேசில் வைத்திருந்த ரூ.2.40 லட்சம் மதிப்பிலான நகைகள் காணவில்லை.

  இதுகுறித்து குருகுலபுல்லா ரெட்டி திருப்பதி கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக போலீசுக்கு டுமிக்கி கொடுத்து வந்த கொள்ளையனை நேற்று மாலை திருப்பதி குரு சினிமா தியேட்டர் அருகே மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் கிழக்கு கோதாவரி கோபாலபுரத்தை சேர்ந்த பிரதாப் ரெட்டி என தெரியவந்தது.

  Next Story
  ×