என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  மரக்காணம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மரக்காணம் அருகே போலீஸ் விசாணைக்கு பயந்து விவாசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  மரக்காணம்:

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பஜனை தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 38) விவசாயி. இவரது மனைவி பூங்கொடி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடராஜனுக்கும் அவரது மனைவி பூங்கொடிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பூங்கொடி மரக்காணம் அருகே உள்ள காணிமேட்டில் வசித்துவரும் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

  பின்பு அவர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜன் தனது மனைவி வேலைபார்க்கும் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கிருந்த மனைவி பூங்கொடியிடம் தகராறு செய்தார் பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

  இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடி கோட்டக்குப்பம் அனைத்து மகளிர்போலீசில் புகார்செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு வரும்படி நடராஜனிடம் பெண் போலீசார் கூறினார்.

  ஆனால் அவர் விசாரணைக்கு செல்லவில்லை. விசாரணைக்கு சென்றால் போலீசார் தன்னை தாக்கிவிடுவார்கள் என நடராஜன் பயந்தார்.

  நேற்று இரவு நடராஜன் நடுக்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்பு அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பலாமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அந்தவழியாக சென்றவர்கள் நடராஜன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசில் புகார்செய்தனர்.

  சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய நடராஜன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
  Next Story
  ×