search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான விஸ்வநாதனை (கைலி அணிந்திருப்பவர்) சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற காட்சி.
    X
    கைதான விஸ்வநாதனை (கைலி அணிந்திருப்பவர்) சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற காட்சி.

    குற்றச்செயல்களில் உடந்தை - கைதான முகிலன் நண்பர் கரூர் சிறையில் அடைப்பு

    பல்வேறு போராட்டங்களில் உடந்தையாக இருந்த முகிலனின் நண்பர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கரூர் சிறையில் அடைத்தனர்,.
    கரூர்:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை கரூர் மாவட்டம் குளித்தலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முகிலனின் நண்பரும், அவருடன் மணல் கடத்தல் எதிர்ப்பு உட்பட பல்வேறு போராட்டங்களில் இணைந்து செயல்பட்டவரும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான கரூர் மாவட்டம் புன்செய் புகழூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 74) என்பவரை கரூர் மாவட்ட சி.பி. சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர்.

    பின்னர் அவரை கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர் மீது 120(பி) கூட்டு சதி, 201 தடயங்களை அழித்தல், 212 கொடுஞ்செயல் செய்த குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்றிரவு கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் நீதிபதி விஜயகார்த்திக் முன்பு, விஸ்வநாதனை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, போலீசார் விஸ்வநாதனை கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×