என் மலர்

  செய்திகள்

  விபத்தில் சிக்கிய கார்.
  X
  விபத்தில் சிக்கிய கார்.

  தர்மபுரி அருகே இன்று விபத்து: கார் கவிழ்ந்து தந்தை-மகன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தர்மபுரி அருகே இன்று காலை கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தர்மபுரி:

  திருப்பூரை சேர்ந்த மூர்த்தி மகன் சுப்புராஜ் (வயது 30). இவர் ரெடிமேடு ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கீர்த்திகா (27). இவர்களது இரண்டரை வயது குழந்தை விமன். சுப்புராஜின் நண்பர் மகேந்திரன் (29). இவரது மனைவி அனிதா. இவர்களது மகன் கிருஷ்வின்.

  இவர்கள் அனைவரும் திருப்பூரில் இருந்து காரில் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க புறப்பட்டு வந்தனர். காரை கீர்த்திகா ஓட்டினார்.

  இன்று காலை தர்மபுரியை அடுத்த சே‌ஷம்பட்டி பிரிவு ரோடு அருகே வந்ததேபாது ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி கவிழ்ந்தது.

  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்புராஜும், அவரது மகன் விமனும் பலியானார்கள். மற்ற 4 பேர் காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

  இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×