search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபூர்வ பிரம்ம கமலம் பூ
    X
    அபூர்வ பிரம்ம கமலம் பூ

    நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ ஒட்டன்சத்திரத்தில் பூத்துக்குலுங்கியது

    ஒட்டன்சத்திரத்தில் நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியதை பொதுமக்கள் பார்த்து ரசித்து வணங்கினர்.
    ஒட்டன்சத்திரம்:

    பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும். அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது. ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது.

    பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும்.

    அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

    அதிலும் அந்த அற்புத மலர், ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும். ஆனால் தற்போது இந்த மலரை சிலசமயங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க காலநிலைகளிலும் காண முடிகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க சிறந்த தோட்டப்பராமரிப்பு மற்றும் இந்த செடி பற்றிய அறிவு இருந்தால் இந்த செடியை வளர்க்கலாம்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிரதான சாலையில் சத்தியநாதன் என்பவர் தனது வீட்டில் பிரம்ம கமல பூ செடியை வளர்த்து வந்தனர். இந்த செடி 15 வருடமாக வளர்ந்து வந்தது. இது ஆண்டுக்கு 1 ஒரு முறை தான் பூக்கும். தற்போது இந்த பூ பூத்து குலுங்குகிறது. ஆடி மாதம் மாலை நேரத்தில் பூத்த இந்த அதிசய பூவை அக்கம் பக்கத்தினர் ஆர்வமுடன் பார்த்து இந்த பூவைப் பார்த்து பெரியவர்கள் தொட்டுக் கும்பிட்டு வணங்கினர். பூ பூக்கும் நள்ளிரவு வேளையில் இதை வணங்கி தங்கள் குறைகளை நீக்க வேண்டிக்கொண்டனர்.

    இதுபற்றி தோட்டக்கலத்துறையினர் கூறுகையில், இந்த செடி பொதுவாக வெட்டப்பட்ட மற்றொரு செடியின் துண்டிலிருந்தும் வளரும். அதிலும் அதன் இலைகளைப் பார்த்தால், தட்டையாக மற்றும் தடிமனாக இருக்கும். இதன் தண்டு பகுதி எப்போதும் இலைகளால் சுற்றப்பட்டிருக்கும்.

    பிரம்ம கமலம் பூவை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிடும் காட்சி.


    மேலும் இதிலிருந்து வரும் பிரம்ம கமலப் பூ இலைகளிலிருந்தே வளர்கிறது. பிரம்ம கமலச் செடியை குளிர் காலத்திற்கு சற்று முன்னர் வைக்க வேண்டும். அதிலும் இந்த செடி, மிகவும் குளிர்ந்த ஹிமாலயாவில் வளர்வதால், தோட்டத்தில் சற்று குளிர்ந்த இடத்தில் வைத்து வளர்த்தால், மிகவும் நன்றாக வளரும்.

    அந்த மலர் வளர்வதற்கு நேரடியாக சூரிய வெளிச்சம் படாதவாறு மற்றும் வளமான, பாறை மண்ணில் வைக்க வேண்டும். அதற்காக மிகவும் கடினமான மண்ணை வைக்க கூடாது. மலைப்பிரதேசத்தில் வளர்ந்ததால், சற்று மலை மண்ணாக இருந்தால் நல்லது.

    அதிலும் மண் தண்ணீரை நன்கு உறிஞ்சுமாறும், சற்று சீரை தேக்கி வைக்குமாறும் இருக்க வேண்டும். பிரம்ம கமலம் ஒரு வித காக்டஸ் செடி. இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் வற்றி, செடி வாடி இறந்துவிடும்.

    இந்த செடி மிகவும் நீளமாக வளராது. இது ஒரு குறுந்தாவரம் தான். மேலும் இது சற்று அதிகமான நீளத்தில் வளர்ந்தால், அதனை வெட்டி தனியாக ஒரு தொட்டியில் வளர்க்கலாம். அதிலும் இந்த பிரம்ம கமலம் பொதுவாக இரவிலேயே மலரும் பூ வகையை சேர்ந்தது.

    பிரம்ம கமலம் பூ என்பது, இமய மலைகளில் வளரும் என்று, புராணங்கள் கூறுகிறது. ஆனால், இமய மலைகளில் மட்டும் இல்லாமல், நன்கு பராமரித்தால் அனைத்து பகுதியிலும் வளர்க்கலாம். புராண கதைகளில், பிரம்ம கமலம் பூ முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற பூக்கள், பகலில் பூக்கும், இரவில் காய்ந்து விடும். ஆனால், இரவில் பூத்து, பகலில் காயும் பூ, பிரம்ம கமலம் மட்டும் தான்.

    பவுர்ணமி சமயத்தில் மிகவும் குளிர்ந்த தட்ப வெப்பநிலையில் இந்த பூ பூக்கும். ஒரே நாள் தான் இது இருக்கும். அடுத்த நாள் வாடிவிடும். இந்தச் செடியின் பிறப்பிடம் அமெரிக்கா ஆகும். சிலசமயங்களில் மாலை நேரத்தில் பூவானது முழுமையாக மலர்ந்துவிடும், இல்லையெனில் இரவு 10 மணிக்கு மேல் தான் முழுமையாக மலரும் என்றனர்.
    Next Story
    ×