search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    நீர் பிடிப்பில் கனமழை- முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்த போதும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தற்போது தாமதமாக பெய்து வரும் மழையினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 496 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 1428 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 113.40 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று 114 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1560 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கும் நீர் வரத்து வந்து கொண்டு உள்ளது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் தற்போது 31 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 214 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

    வைகை அணை

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 410 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.10 அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 75.44 அடி. வரத்து 6 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 81.4, தேக்கடி 44, கூடலூர் 20, சண்முகா நதி அணை 2, உத்தமபாளையம் 83, வீரபாண்டி 2, கொடைக்கானல் 4.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலையும் கூடலூர், குமுளி, லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×