என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கரூர் அருகே தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்1 Aug 2019 10:09 AM IST (Updated: 1 Aug 2019 10:09 AM IST)
கரூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ராஜபாளையத்தை அடுத்த மாக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சுதா (வயது 48). இந்த தம்பதிக்கு சூர்யா (21) என்ற மகனும், காசிகா (16) என்ற மகளும் இருந்தனர். மகன் சூர்யா சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
மகள் காசிகா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு உருவானது. இதனால் சுதா கணவருடன் கோபித்துக் கொண்டு திருச்செங்கோட் டில் உள்ள தனது சகோதரர் கார்த்திக் வீட்டில் வசித்து வந்தார்.
மகள் காசிகாவையும் தன்னுடன் அழைத்து சென்றார். பலமுறை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ராஜா மனைவியை அழைத்த போதும் அவர் மறுத்து விட்டார். எனவே ராஜா தனியாகவே வசித்து வந்தார். உறவினர்கள் அவர்களை சேர்த்து வைக்க எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை சுதாவும், மகள் காசிகாவும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்பாததால் சுதாவின் சகோதரர் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே இன்று காலை கரூர் அருகேயுள்ள திருமுக்கூடலூர் பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சுதாவும், அவரது மகள் காசிகாவும் மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்தனர். அவர்களுக்கு அருகில் விஷ மாத்திரைகள் கிடந்தன.
இதுபற்றி தங்கராஜ் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வாங்கல் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது காசிகா இறந்திருந்தார். சுதா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வேன் மூலம் சுதாவை கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய சுதா, காசிகா இருவரும் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் விஷம் கலந்த மாத்திரைகளை பழத்தில் வைத்து சாப்பிட்டுள்ளது தெரிய வந்தது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் சுதா மனமுடைந்து மகளுடன் தற்கொலை செய்துள்ளார்.
மகன் வெளியூரில் விடுதியில் தங்கி படிப்பதால் அவர் தப்பியுள்ளார். தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கரூர் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×