search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
    X
    சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    திருட்டு ஆட்டை சமைத்து சாப்பிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    திருட்டு ஆட்டை பலியிட்டு சமைத்து சாப்பிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் வாத்தலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சக போலீசாருடன் சிறுகாம்பூர் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஆடு ஒன்றை கொண்டு சென்றார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் திடீரென ஆட்டை அங்கேயே விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார்.

    இதையடுத்து போலீசார் ஆட்டை மீட்டு விசாரித்த போது, அது திருடப்பட்ட ஆடு என்பதும், அதனை வாலிபர் திருடி செல்லும் போது போலீசாரை பார்த்ததும் அதனை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்றதும் தெரிய வந்தது.

    அந்த ஆட்டை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார், அந்த ஆடு யாருடையது என்று விசாரணை நடத்தினர். ஆனால் அந்த ஆட்டிற்கு உரிமை கொண்டாடி யாரும் வராததாலும், உரிமையாளர் யாரென்று கண்டுபிடிக்க முடியாததாலும் அதனை போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அருகில் உள்ள பனையடி கருப்புசாமிக்கு, அந்த ஆட்டை பலி கொடுத்து சமைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகார் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மீது கூறப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல்ஹக், சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
    Next Story
    ×