search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் ஜிகே வாசன் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் ஜிகே வாசன் பேசிய காட்சி.

    விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை தமாகா எதிர்க்கும்- ஜி.கே.வாசன் பேச்சு

    திருப்பூரில் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஜிகே வாசன் விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை த.மா.கா. எதிர்க்கும் என்று கூறியுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் மோகன் கார்த்திக் வரவேற்று பேசினார். காமராஜரின் புகைப்பட கண்காட்சியை மாநில துணைத்தலைவர் ஞானதேசிகன் திறந்து வைத்தார்.

    மாநில செயலாளர் சேதுபதி, மாநில துணைத் தலைவர்கள் கோவை தங்கம், சக்தி வடிவேல், ஈரோடு ஆறுமுகம், குனியமுத்தூர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். மாநில பொது செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாவட்ட பொறுப்பாளர்கள் கவுதமன், ஈரோடு சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

    தமிழகத்தில் த.மா.கா. மரியாதைக்குரிய, எல்லோராலும் மதிக்கக் கூடிய கட்சியாக விளங்கி வருகிறது. நாம் ஆளும் கட்சியாக மாற வேண்டும். படிப்படியாக அதற்கான பணிகளில் நாம் ஈடுபட வேண்டும்.

    தமிழக அரசு குடிநீர் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை ஒருபோதும் விவசாயிகள் மீது அரசு திணிக்கக்கூடாது. அப்படி திணித்தால் அதை த.மா.கா. எதிர்க்கும்.

    திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். டாலர் சிட்டியான திருப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அரசு பள்ளிகளுக்கு தேவையான நிதி உதவி, பொருளுதவி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.

    பொதுக்கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஓ.கே. சண்முகம், ரத்தினவேல், வாசன், குணசேகரன், அன்னூர் ராமலிங்கம், கோவை தெற்கு மாநகர் மாவட்ட த.மா.க தலைவர் வி.வி.வாசன், வடக்கு மாநகர் மாவட்ட தலைவர் கே.என்.ஜவஹர், மாநில செயலாளர்கள் ராஜ்குமார், பொன்.ஆனந்தகுமார், மாநில துணைத்தலைவர் இளைஞரணி சி.பி.அருண் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் ஜிகாமணி, மற்றும் அய்யாசாமி, சதீஷ் நாகராஜ் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அடூல் காந்தி ராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×