என் மலர்
செய்திகள்

மாதிரி படம்
பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 16 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. மனு
நீதிமன்ற காவலில் உள்ள 16 பேரையும் 10 நாட்கள் விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
பூந்தமல்லி:
தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக 16 பேரை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினத்தில் கைதான அசன்அலி, ஹாரிஸ்முகமது ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் டெல்லியில் பதுங்கி இருந்த 14 பேரை என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்து பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற காவலில் உள்ள 16 பேரையும் 10 நாட்கள் விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் 16 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தினால்தான் இந்த கும்பலுக்கு யார்-யாருடன் தொடர்பு? எதற்காக சதித் திட்டம் தீட்டினார்கள் என்பது போன்ற தகவல்கள் தெரிய வரும்.
Next Story