என் மலர்

  செய்திகள்

  சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்.
  X
  சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்.

  கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் மழைநீர் தேங்கிய சாக்கடையை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
  கோவை:

  கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது.

  கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி சாலை மேம்பாலம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

  இந்நிலையில் கோவை ரெயில் நிலையம் பகுதியில் மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடையுடன் கலந்த மழைநீர் அருகில் உள்ள லங்கா கார்னர் பாலத்தின் கீழ் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

  அப்போது அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோர் உடனடியாக பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரை அப்புறப்படுத்த சாக்கடையை சுத்தம் செய்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் கொட்டும் மழையிலும் அவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலையில் தண்ணீர் குறைந்து போக்குவரத்து சீரானது.

  இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சாக்கடையை சுத்தம் செய்து தண்ணீர் செல்ல வகை செய்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோரை பாராட்டினர்.  Next Story
  ×