என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் சாரல் மழை
Byமாலை மலர்18 July 2019 4:49 AM GMT (Updated: 18 July 2019 4:49 AM GMT)
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், குலசேகரம், திற்பரப்பு, களியக்காவிளை, குழித்துறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது.
ஒருசில நாட்கள் மட்டுமே மழை பெய்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கேரள மற்றும் தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதையடுத்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 8 மி.மீ. மழை பதிவானது.
மார்த்தாண்டம், குலசேகரம், திற்பரப்பு, களியக்காவிளை, குழித்துறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. பள்ளி சென்ற மாணவ- மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 4.80 அடியாக இருந்தது. அணைக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.25 அடியாக உள்ளது. 217 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 320 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் தோவாளை, அனந்தனாறு, நாஞ்சில் நாடு, புத்தனாறு சானல்களில் விடப்பட்டுள்ளது. இதனால் பாசன குளங்களில் தண்ணீர் பெருகத் தொடங்கி உள்ளன. கன்னிப்பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் களை எடுத்தல், உரமிடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story
×