என் மலர்

  செய்திகள்

  இலவம் பஞ்சு குடோன் தீ பிடித்து எரிந்த காட்சி.
  X
  இலவம் பஞ்சு குடோன் தீ பிடித்து எரிந்த காட்சி.

  கோத்தகிரியில் இன்று இலவம் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இன்று காலை இலவம் பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

  கோத்தகிரி, ஜூலை.18-

  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மாரியம்மன் கோவில் அருகே இலவம் பஞ்சு குடோன் உள்ளது. இதன் உரிமையாளர் ஜாகீர்உசேன். இவர் கோத்தகிரி, கரிக்கையூர், குஞ்சப்பனை, சோலூர் மட்டம், கீழ் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் இலவம் பஞ்சுகளை கொள்முதல் செய்து மெத்தை, தலையணை உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை இலவம் பஞ்சு குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது.

  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பஞ்சு குடோன் தீ பிடித்து எரிந்தது. உஷாரான பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

  இது குறித்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

  போலீஸ் நிலையம் மற்றும் நகைக்கடை அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இன்று காலை பஞ்சு குடோனில் தீ பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. * * * தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த காட்சி. * * * இலவம் பஞ்சு குடோன் தீ பிடித்து எரிந்த காட்சி.

  Next Story
  ×