என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குட்டியை முதுகில் சுமந்து உலா வந்த கரடி
Byமாலை மலர்18 July 2019 3:22 AM GMT (Updated: 18 July 2019 3:22 AM GMT)
நீலகிரி மாவட்டம் அரவேனு பகுதியில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையில் குட்டியை முதுகில் சுமந்து உலா வந்த கரடி தேயிலை தோட்டத்துக்குள் வருவதை கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் புகுவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அரவேனு பகுதியில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையில் குட்டியை முதுகில் சுமந்து கரடி உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் கரடிக்கு சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் கழித்து குட்டியுடன் அந்த கரடி அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்றது. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர்.
இதற்கிடையில் தேயிலை தோட்டத்துக்குள் கரடி வருவதை கண்ட தொழிலாளர்கள், பச்சை தேயிலை பறிக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
இந்த பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே நாங்கள் அச்சத்துடன் வெளியே சென்று வர வேண்டி உள்ளது. கரடிகள் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story
×