search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் மீது வழக்குபதிவு
    X
    வாலிபர் மீது வழக்குபதிவு

    பொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்

    திருமணம் செய்வதாக கூறி பொள்ளாச்சி இளம்பெண்ணை உல்லாசம் அனுபவித்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த திருமணமாகி விவாகரத்து பெற்ற 37 வயது இளம்பெண் தற்போது சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அவர் ஆன் லைன் மூலம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 9 வருடங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரிடம் இருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றேன்.

    பின்னர் சென்னையில் தங்கி இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு எங்கள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்த கோவை ஜி.டி. நாயுடு வீதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது மகன் கிஷோர் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. என்னை திருமணம் செய்வதாக கிஷோர் உறுதியளித்தார்.

    இதனால் அவரிடம் நான் சகஜமாக பழகினேன். இதனை பயன்படுத்திய அவர் என்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார். மேலும் நாங்கள் தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை அவரது செல்போனில் எனக்கு தெரியாமல் பதிவு செய்து வைத்தார். என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த கிஷோர் தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

    மேலும் நான் தொடர்ந்து வலியுறுத்தினால் என்னுடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி என்னிடம் இருந்து ரூ.56 லட்சத்தை பறித்து கொண்டார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரிடம் உள்ள என்னுடைய படங்கள் மற்றும் வீடியோக்களை பறிமுதல் செய்து அதனை அழிக்க வேண்டும்.

    இவ்வாறு அப் பெண் மனுவில் கூறியிருந்தார்.

    இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய கிஷோர் மீது கற்பழிப்பு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த சம்பவம் சென்னையில் நடந்ததால் கிண்டி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    Next Story
    ×