என் மலர்

  செய்திகள்

  விபத்தில் பலியா ஆசிரியை
  X
  விபத்தில் பலியா ஆசிரியை

  ஆசிரியை உயிரை பறித்த மினி லாரி - கணவர் கண் முன் பரிதாபம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்குன்றம் அருகே மோட்டார்சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் கணவர் கண் முன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  செங்குன்றம்:

  செங்குன்றம் எம்.ஏ. நகர் நேதாஜி முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு.

  இவரது மனைவி லதா (38). அம்பத்தூர் அருகே புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

  இன்று காலை லதா பள்ளிக்கு செல்வதற்காக தனது கணவர் பிரபுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். செங்குன்றம் பகுதியில் மண்டபம் அருகே ஜி.எம்.டி. சாலையில் சென்றபோது சோழவரத்தில் புழல் நோக்கி வந்த மினி லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் லதா சாலையில் விழுந்தார். அவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பிரபு படுகாயம் அடைந்தார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

  விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான நெல்லையைச் சேர்ந்த மகேந்திரன் (34) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×