search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலச்சந்திரன்
    X
    பாலச்சந்திரன்

    தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைப்பெய்ய வாய்ப்பு -பாலச்சந்திரன்

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழைப்பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஜூன்1ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே மழைப்பெய்ய தொடங்கியுள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்களில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    இதனால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மேலும் தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  
    Next Story
    ×