search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன் ராதாகிருஷ்ணன்
    X
    பொன் ராதாகிருஷ்ணன்

    தமிழுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது- பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

    ரெயில்வே துறையில் தமிழ்மொழி இல்லாமல் இருந்ததை தற்போது தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தபால் துறை தேர்வுகள் இனி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் தமிழுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை மத்திய அரசு கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. இதில் யாரும் வருத்தப்பட தேவை இல்லை.
    கனிமொழி
    ரெயில்வே துறையில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியில் மக்களுக்கு புரியாத வண்ணம் உள்ளதாக கனிமொழி தெரிவித்து உள்ளார். ஏற்கனவே ரெயில்வே துறையில் தமிழ்மொழி இல்லாமல் இருந்ததை தற்போது தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொழி சார்ந்து யாரும் எந்த அச்சமும் படத்தேவை இல்லை. மொழி திணிப்பு என்பது கட்டாயம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×