என் மலர்

  செய்திகள்

  கைதான ஆசிரியர் டேவிட்ராஜ்.
  X
  கைதான ஆசிரியர் டேவிட்ராஜ்.

  கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மி‌ஷம்- ஆசிரியர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மேற்கு மாவட்டம் கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  நாகர்கோவில்:

  குமரி மேற்கு மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறைபொற்றையில் தனியார் உயர்நிலைப்பள்ளி உள்ளது.

  இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் டேவிட் ராஜ், (வயது 46). இவர், பள்ளியில் 6-ம் வகுப்புக்கு பாடம் நடத்துகிறார். 6-ம் வகுப்பில் படிக்கும் 3 மாணவிகளிடம் ஆசிரியர் டேவிட்ராஜ், அடிக்கடி அத்துமீறி நடப்பதாக மாணவிகள் புகார் கூறினர்.

  கடந்த வெள்ளிக்கிழமையும் ஆசிரியர் டேவிட்ராஜ், 3 மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததோடு, சில்மி‌ஷத்திலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

  ஆசிரியர் சில்மி‌ஷம் செய்தது பற்றி மாணவிகள் 3 பேரும் அவர்களின் பெற்றோரிடம் கூறி அழுதனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடமும், நிர்வாகத்திடமும் புகார் கூறினர்.

  பள்ளியின் தலைமை ஆசிரியர் இதுபற்றி கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும், குழந்தைகள் நல அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

  குழந்தைகள் நல அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆசிரியர் டேவிட்ராஜ், மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கொல்லங்கோடு போலீசில் புகார் கொடுத்தனர்.

  கொல்லங்கோடு போலீசார் டேவிட்ராஜை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர், குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார். மகளிர் போலீசார் ஆசிரியர் டேவிட்ராஜை கைது செய்தனர்.

  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் டேவிட்ராஜ் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  இந்த சம்பவம் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×