search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை (கோப்பு படம்)
    X
    கொலை (கோப்பு படம்)

    காரிமங்கலம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிணம் - கைதான வாலிபர் வாக்குமூலம்

    காரிமங்கலம் அருகே பெண்ணை கொலை செய்து முட்புதரில் வீசி சென்ற சம்பவத்தில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள டி.குண்டு அருகே கும்பாரஅள்ளி சாலையில் கடந்த மாதம் 7-ம் தேதி ஒரு முட்புதரில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணத்தை காரிமங்கலம் போலீசார் கைப்பற்றி அவரை பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் இறந்து கிடந்த பெண்ணின் காதில் 2 தங்க தோடுகளும் கையில் 2 தங்க மோதிரமும் இருப்பதை வைத்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.

    அப்போது அந்த பெண்ணின் கையில் இருந்த 2 தங்க மோதிரத்தை போலீசார் உன்னிப்பாக கவனித்தபோது அதில் ஒரு மோதிரத்தில் சிலுவை அடையாளம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அதனால் அந்த மோதிரம் எந்த நகை கடையில் வாங்கப்பட்டிருக்கும் என்ற கோணத்தில் பிரபலமான நகை கடைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் கிடைத்த விலாசம் மற்றும் போன் நம்பரை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசார் கடைசியில் பெங்களுரில் வசிக்கும் சுவேதாபிரியா என்ற பெண் அந்த மோதி ரத்தை வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த மோதிரத்தை தனது தாய் வசந்தாமேரி அணிந்திருப்பதாக தெரிவித்தார்.

    அதனால் முட்புதரில் பிணமாக இருந்தது வசந்தாமேரி (55) என்பதை உறுதி செய்த போலீசார் சுவேதாபிரியாவை காரிமங்கலம் வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது முட்புதரில் சடலமாக இருந்தது தனது தாய் வசந்தாமேரி(55) என்று அவர் அடையாளம் காண்பித்தபின் அவரிடம் வசந்தாமேரியின் பிரேதத்தை போலீசார் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை காரிமங்கலம் அகரம் பிரிவு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ் குமார், சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் இருந்த ஆசாமி போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவன் பெங்களூரு அருகே உள்ள தாவணிக்கரையை சேர்ந்த சென்னப்பா என்பவரின் மகன் மனோகரா(32) என்பதும் அவன் ஒரு என்ஜினீயரிங் பட்டதாரி என்பதும் தெரிந்தது. அவனிடம் மேலும் விசாரித்ததில் கடந்த மாதம் 7-ந் தேதி காரிமங்கலம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணை தானும் திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கழுத்தை நெறித்து கொன்றதாக ஒப்பு கொண்டார்.

    கைதான மனோகரா போலீசாரிடம் மேலும் கூறியதாவது:

    பெங்களூரு அடுத்த கனகசுக்கி பகுதியை சேர்ந்த இரவு விடுதி நடன அழகி லதா என்கிற பிரித்தி மற்றும் அவரது தோழி அனு என்கிற சுவேதா ஆகியோருடன் எனக்கு நெருக்கமான உறவு இருந்தது.

    அப்போது லதாவின் தொழிலுக்கு இடையூறாக அதேபகுதியை சேர்ந்த வசந்தாமேரியை இருப்பதாகவும் அவரை கொலை செய்ய வேண்டும் என்றும் என்னிடமும் திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடமும் லதா தெரிவித்தார்.

    அதற்கு ஒப்புக்கொண்ட நாங்கள் கடந்த 6ம் தேதி மாண்டியாவுக்கு லதாவுடன் சுற்றுலா சென்றிருந்த வசந்தாமேரியை கொலை செய்ய காத்திருந்தோம்.

    அங்கு லதா மற்றும் சுவேதா ஆகிய இருவரும் வசந்தாமேரியை தந்திரமாக மட்டேகவுடனதொட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு லதா அளவுக்கு அதிகமாக மது விருந்து அளித்தார். அப்போது போதை அதிகமான வசந்தா மேரியை நானும் நண்பர் சீனிவாசனும் கழுத்தை நெறித்து கொன்றோம்.

    பின்பு ஒரு சொகுசு காரில் வசந்தாமேரியின் உடலை காரிமங்கலத்திற்கு கொண்டு வந்து ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரத்தில் பிணத்தை வீசிவிட்டு சென்றோம். இவ்வாறு அவர் கூறினான்.

    அதைத்தொடர்ந்து போலீசார் மனோகராவை(32) கைது செய்து பாலக்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    இந்த படுகொலைக்கு முக்கிய காரணமான பெங்களூருவை சேர்ந்த லதா என்கிற பிரித்தி, அனு என்கிற சுவேதா மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து உள்ளனர். தனிப்படை போலீசார் 2 பெண்களை தேடி பெங்களூருவுக்கும், சீனிவாசனை தேடியும் திருவண்ணாமலைக்கும் விரைந்துள்ளனர்.
    Next Story
    ×