என் மலர்

  செய்திகள்

  முகிலன் மனைவி பூங்கொடி
  X
  முகிலன் மனைவி பூங்கொடி

  ஸ்டெர்லைட் ஆலையின் சி.டி. ஆதாரங்களை வாங்குவதற்காக அடைத்து வைத்துள்ளனர்- முகிலன் மனைவி கண்ணீர் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசுக்கு ஆபத்து என்பதால் ஸ்டெர்லைட் ஆலையின் சி.டி. ஆதாரங்களை வாங்குவதற்காக அடைத்து வைத்துள்ளனர் என்று முகிலன் மனைவி பூங்கொடி கூறியுள்ளார்.

  கரூர்:

  ஸ்டெர்லை ஆலை எதிர்ப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான முகிலன் நள்ளிரவு 2 மணிக்கு கரூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

  அப்போது அங்கு வந்திருந்த அவரது மனைவி பூங்கொடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  முகிலன் மீது திட்டமிட்டு அரசாங்கமும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் பழி போட்டதாகவே நினைக்கிறேன். எந்த நாட்டில் நாம் இருக்கிறோம்.

  தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா, இந்தியாவில்தான் இருக்கிறோமா? என்ன கொடுமை இது. கொலை செய்தவன், கொள்ளை அடித்தவன் எல்லாம் நாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.

  முகிலன் என்னங்க தப்பு செய்தா? முதலில் இரவு ஓய்வெக்க அனுமதித்து காலை 10 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக சொன்னார்கள். பின்னர் திடீரென அரைமணிநேரத்தில் கோர்ட்டுக்கு வாருங்கள் என நள்ளிரவு தகவல் சொல்கிறார்கள்.

  நான் மக்களிடம் கேட்பது, முகிலன் என்ன தப்பு செய்தார். உங்களுக்காக போராடுனது தப்பா? (அப்போது கதறி அழுதார்). அவர் இனிமேல் போராடக்கூடாது. அவர் மாதிரி இனியாரும் போராடக் கூடாது என்பதற்காக ஆளும் வர்க்கத்தினர் இப்படி செய்கிறார்கள். மொத்தமாக யாரோ அவரை இயக்குகிறார்கள். அதுதான் பிரச்சினையே. மொத்த அரசாங்கத்துக்கும் பிரச்சினை.

  அவரை எங்கேயே அடைத்து வைத்து அவர் வெளியிட்ட ஸ்டெர்லைட் சி.டி. பற்றி தெளிவாக கேட்டுருக்கிறார்கள்.

  கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக முகிலனை போலீசார் அழைத்து வந்த காட்சி.

  ஏற்கனவே இன்னொரு சி.டி. யும் வெளியிடுவதாக சொன்னார். அதற்கான ஆதாரங்கள் அவரிடம் இருப்பதால் அது வெளிவந்தால் மொத்த அரசாங்கத்துக்கும் பிரச்சினை என்பதால் ஆதாரங்களை வாங்குதவதற்காக இருட்டு அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். நாயை கடிக்க விட்டிருக்கிறார்கள். ஒரு முதலுதவி சிகிச்சை கூட அளிக்கவில்லை. என்னங்க நடக்குது நாட்டில்?

  நான் அவரிடம் தனியாக பேச அனுமதிக்கவில்லை. சுற்றி 30, 40 பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி எதற்கு பண்றீங்க? அவர் என்ன கொலையா செய்து விட்டார். சட்ட ரீதியாக என்ன நடவடிக்கையோ அதை நாங்கள் எடுப்போம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×