search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    கடலில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று குளச்சல் தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேலு கேள்விக்கு பதில் அளித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு புதூர் என்னுமிடத்தில் புதூரைச் சேர்ந்த சிறுவர்கள் சகாய ரெகின், இன்பென்டர் ரகீட் மற்றும் சச்சின் ஆகிய 3 சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, சச்சின் உடல் 16.6.2019 அன்றும், சகாய ரெகின் என்பவரது உடல் 17.6.2019 அன்றும், இன்பென்டர் ரகீட் என்பவரது உடல் 18.6.2019 அன்றும் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

    மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×